அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் திருக்கழுக்குன்றம்

http://www.pakshitheertham.thirukalukundram.in/

Thirukalukundram.in

 • ThirukalukundramTemple01
 • ThirukalukundramTemple02
 • ThirukalukundramTemple03
 • ThirukalukundramTemple04
 • ThirukalukundramTemple05
 • ThirukalukundramTemple06
 • ThirukalukundramTemple07
 • ThirukalukundramTemple08
 • ThirukalukundramTemple09
ThirukalukundramTemple011 ThirukalukundramTemple022 ThirukalukundramTemple033 ThirukalukundramTemple044 ThirukalukundramTemple055 ThirukalukundramTemple066 ThirukalukundramTemple077 ThirukalukundramTemple088 ThirukalukundramTemple099
bootstrap image slider by WOWSlider.com v8.8
ருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் -திருக்கழுக்குன்றம்

பாவங்களையும் பிணிகளையும் போக்கி பிறவியில்லா பேரின்பத்தைக் கொடுக்கும் அருள்மிகு வேதகிரிஸ்வரர் !!

திருக்கழுக்குன்றம் (Thirukalukundram) நான்கு வேதங்களே நான்கு உச்சிகளாகக் கொண்ட மலையாக அமைந்துள்ள இடம். வேதகிரீஸ்வரர் கோயில் (Vedhagiriswarar Temple) திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமயக் குரவர்கள் நால்வரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்திருமலையில் (Vedhagiriswarar Temple) நாள்தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' (patchi theertham)என்றும், திருக்கழுக்குன்றம் (Thirukalukundram) என்றும் பெயராயிற்று. இத்திருத்தலம் (Vedhagiriswarar Temple) பாவங்களையும் பிணிகளையும் நிவர்த்தி செய்து பிறவியில்லா பேரின்பத்தைக் கொடுக்கத்தக்கதாய் சிறப்புற்று விளங்குகிறது. திருவண்ணாமலை தீபம் பார்த்தால் மோட்சம் - திருக்கழுக்குன்றத்தை (Thirukalukundram) பற்றி நினைத்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


வேதகிரீஸ்வரர் திருக்கோயிலின் (Vedhagiriswarar Temple) கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பதும் திருமலையை சுற்றி நந்தி பகவான் ஈசனை நோக்கி இருப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில்(Kanni Raasi) குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா (latcha deepam) நடைபெறும். புஷ்பகர மேளா மிகப் பெரிய புகழ் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம். இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மூலிகை கலந்த தடாகம்(Sangutheertham) என்பது குறிப்பிடத்தக்கது.


த்திருத்லத்தில் (Vedhagiriswarar Temple) வேதகிரீஸ்வரர் சுயம்பு(Suyambu) மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்திருத்தலம் (Vedhagiriswarar Temple) கழுகுகள் வழிபட்டதால் “கழுகாசலம்”, மகாவிஷ்னு வழிபட்டதால் “வேதநாரயனபுரி” எனவும், பிரம்மன் வழிபட்டதால் ”பிரம்மபுரி” எனவும், சாவித்திரியால் சபிக்கப்பட்ட பிரம்மதேவன் இத்தலத்தில் சாப விமோசனம் பெற்றதால் "இந்திரபுரி" எனவும், வேதகிரி, வேதாசலம், கங்காசலம், கழுக்குன்றம் (Thirukalukundram), எனும் பெயர்களுடன் "பட்சி தீர்தம்"(pakshi theertham) எனவும் வழங்கபடுகிறது. இறைவன்மலையின் உச்சியில் கொழுந்து உருவில் இருப்பதால் இறைவனுக்குக் “மலைக்கொழுந்து” என்றும் பெயருண்டு.

வேதகிரீஸ்வரர் கோயில்


இறைவர் : வேதகிரீஸ்வரர் (திருமலை)

இறைவி : திரிபுரசுந்தரி அம்மன்

இறைவர் : பக்தவச்சலேஸ்வரர்                     (தாழக்கோவில்)

தல மரம் : வாழை மரம் (கதலி).

தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்


திருக்கோவில் திறக்கும் நேரம்


அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் காலை 9AM முதல் 12.30PM வரை , மாலை 4PM முதல் இரவு 7PM வரை திறந்திருக்கும்.
அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் திருக்கோயில்
காலை 6AM முதல் 12PM வரை, மாலை 4 PM முதல் இரவு 8.30PM வரை திறந்திருக்கும்.

தினசரி பூஜை நேரம்

 • 08.00 AM       கால சாந்தி பூஜை
 • 11.00 AM       உச்சிகால பூஜை
 • 05.30 PM       சாய்ராட்சை
 • 08.00 PM       அர்த்தசாம பூஜை

        விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுபடும்

பின் தொடர்

+91-9629073538

+91-9894975977

www.thirukalukundram.in@gmail.com

Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website of Arulmigu Thiripura sundari Amman and Sri Vedhagiriswarar Temple , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees