அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் திருக்கழுக்குன்றம்

Thirukalukundram.in

  • ThirukalukundramTemple01
  • ThirukalukundramTemple02
  • ThirukalukundramTemple03
  • ThirukalukundramTemple04
  • ThirukalukundramTemple05
  • ThirukalukundramTemple06
  • ThirukalukundramTemple07
  • html slideshow
  • ThirukalukundramTemple09
ThirukalukundramTemple011 ThirukalukundramTemple022 ThirukalukundramTemple033 ThirukalukundramTemple044 ThirukalukundramTemple055 ThirukalukundramTemple066 ThirukalukundramTemple077 ThirukalukundramTemple088 ThirukalukundramTemple099
bootstrap image slider by WOWSlider.com v8.8
ருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் -திருக்கழுக்குன்றம்

திருக்கழுகுன்றம் பேரூராட்சி பொது தகவல்



திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு அருகே 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள எழில்மிகுந்த நகரம்.காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 50கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து சுமார் 70கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,677 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருக்கழுகுன்றம் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருக்கழுகுன்றம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோயில், வட்டாட்சியர் அலுவலகம், வட்டா வளர்ச்சி அலுவலகம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நீதிமன்றம் ஆகியவற்றினை கொண்டுள்ள தேர்வுநிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி சென்னையிலிருந்து 65 கிலோ மீட்டர் துரத்திலும், செங்கல்பட்டு-மாமல்லபுரம் மாநில நெடுஞ்சாலையில் 14 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி நெறியாளர்களுக்கு முதன்மையான புகழ்மிக்க பெரிய தலம், தொண்டை நாட்டில் தேவாரம் பெற்ற முப்பத்திரண்டு சிவத் தலங்களுள் முதன்மையானது. வேதங்கள் நான்கும் மலையுருவாக இருந்தமையால் இது வேதகிரி என்றும் அழைக்கப்படுகிறது. திருக்கழுக்குன்றம் கோயில் 7ம் நுற்றாண்டில் கி.பி.610-640ல் பல்லவ மன்னர்களின் புகழ்பெற்ற மகேந்திர வர்ம பல்லவனால் கட்டப்பட்டது. இம்மலையினை வலம் வருவதினால் கொடிய நோய் உள்ளவர்களும், மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களும்திருமலையைச் சுற்றி ஒரு மண்டலத்திற்கு வலம் பந்தால் நோய்கள் குணமாகும் . ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

அருகில் உள்ள ரயில் நிலையம் : செங்கல்பட்டு - 14Km

அருகில் உள்ள விமான நிலையம் : மீனம்பாக்கம், சென்னை - 50Km

அருகில் உள்ள புகழ் பெற்ற திருத்தலங்கள் :

1.அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில், திருப்போரூர்

2.அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்

3.அருள்மிகு வாடாமல்லீஸ்வரர் திருக்கோவில், ஓரகடம்.

4.அருள்மிகு பெரியாண்டவர் ஆலயம்,திருநிலை

5.அருள்மிகு முன் குடுமீஸ்வரர் திருக்கோவில்,பொன்விளைந்த களத்தூர்

6.அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோவில்,வழுவதுர்



அருகில் உள்ள மருத்துவமனை:
1.அரசு மருத்துவமனை திருக்கழுக்குன்றம்
2. செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை,செங்கல்பட்டு.

தினசரி பூஜை நேரம்

  • 08.00 AM       கால சாந்தி பூஜை
  • 11.00 AM       உச்சிகால பூஜை
  • 05.30 PM       சாய்ராட்சை
  • 08.00 PM       அர்த்தசாம பூஜை

        விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுபடும்

பின் தொடர்

+91-9629073538

+91-9894975977

www.thirukalukundram.in@gmail.com

Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website of Arulmigu Thiripura sundari Amman and Sri Vedhagiriswarar Temple , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees