அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் திருக்கழுக்குன்றம்

Thirukalukundram.in

 • ThirukalukundramTemple01
 • ThirukalukundramTemple02
 • ThirukalukundramTemple03
 • ThirukalukundramTemple04
 • ThirukalukundramTemple05
 • ThirukalukundramTemple06
 • ThirukalukundramTemple07
 • html slideshow
 • ThirukalukundramTemple09
ThirukalukundramTemple011 ThirukalukundramTemple022 ThirukalukundramTemple033 ThirukalukundramTemple044 ThirukalukundramTemple055 ThirukalukundramTemple066 ThirukalukundramTemple077 ThirukalukundramTemple088 ThirukalukundramTemple099
bootstrap image slider by WOWSlider.com v8.8
ருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் -திருக்கழுக்குன்றம்

மாணிக்கவாசக-சுவாமிகளின் திருக்கழுக்குன்ற திருப்பதிகம்பாடல் எண் : 1

பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
        மான்உன் நாமங்கள் பேசுவார்க்(கு)
    இணக்கி லாததோர் இன்ப மேவருந்
        துன்ப மேதுடைத் தெம்பிரான்
    உணாக்கி லாததோர் வித்து மேல்விளை
        யாமல் என்வினை ஒத்தபின்
    கணக்கி லாத்திருக் கோலம் நீ வந்து
        காட்டினாய்கழுக் குன்றிலே


பாடல் எண் : 2

பிட்டு நேர்பட மண்சு மந்த
        பெருந்து றைப்பெரும் பித்தனே
    சட்ட நேர்பட வந்திலாத
        சழக்க னேன்உனைச் சார்ந்திலேன்
    சிட்டனேசிவ லோகனே சிறு
        நாயி னுங்கடை யாய வெங்
    கட்ட னேனையும் ஆட்கொள் வாள் வான்வந்து
        காட்டினாய்கழுக் குன்றிலே


பாடல் எண் : 3

மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி
        மலங்கெ டுத்த பெருந்துறை
    விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி
        மேல்வி ளைவ தறிந்திலேண்
    இலங்கு கின்றநின் சேவடிகள்
        இரண்டும் வைப்பிட மின்றியே
    கலங்கி னேன்கலங் காமலே வந்து
        காட்டினாய்கழுக் குன்றிலே


பாடல் எண் : 4

பூணொ ணாததொ ரன்பு பூண்டு
        பொருந்தி நாள்தொறூம் போற்றவும்
    நாணொ ணாததொர் நானம் எய்தி
        நடுக்கடலுள் அழுந்தி நான்
    பேணொ ணாதபெ ருந்துறைப் பெருந்
        தோணி பற்றி யுகைத்தலுங்
    காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
        காட்டினாய்கழுக் குன்றிலே


பாடல் எண் : 5

கோல மேனிவ ராக மேகுண
        மாம்பெ ருந்துறைக் கொண்டலே
    சீல மேதும் அறிந்தி லாதஎன்
        சிந்தை வைத்த சிகாமனி
    ஞாலமேகரி யாக நானுனை
        நச்சி நச்சிட வந்திடிங்
    கால மேஉனை ஒதநீ வந்து
        காட்டினாய்கழுக் குன்றிலே


பாடல் எண் : 6

பேதம் இல்லாதொர் கற்ப ளித்த
        பெருந்துறைப் பெரு வெள்ளமே
    ஏத மேபல பேச நீஎனை
        ஏதிலார்முனம் என்செய்தாய்
    சாதல் சாதல்பொல் லாமை யற்ற
        தனிச்ச ரண்சர ணாமெனக்
    காத லால்உனை ஓத நீ வந்து
        காட்டினாய்கழுக் குன்றிலே


பாடல் எண் : 7

இயக்கி மாரறு பத்து நால்வரை
        எண்குணம் செய்த ஈசனே
    மயக்க மாயதோர் மும்ம லப்பழ
        வல்வி னைக்கள் அழுந்தவும்
        துயக்க றுத்தனை ஆண்டு கொண்டு நின்
    தூய்ம லர்க்கழல் தந்தெனைக்
    கயக்க வைத்தடி யார்முனே வந்து
        காட்டினாய்கழுக் குன்றிலே


தினசரி பூஜை நேரம்

 • 08.00 AM       கால சாந்தி பூஜை
 • 11.00 AM       உச்சிகால பூஜை
 • 05.30 PM       சாய்ராட்சை
 • 08.00 PM       அர்த்தசாம பூஜை

        விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுபடும்

பின் தொடர்

+91-9629073538

+91-9894975977

www.thirukalukundram.in@gmail.com

Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website of Arulmigu Thiripura sundari Amman and Sri Vedhagiriswarar Temple , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees